டெல்லி கேப்பிடல்ஸ்
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து மும்பை அணி விளையாடியது போல மிகச் சிறப்பாக விளையாடிய அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஒன்று. இறுதிப் போட்டி வரை முன்னேறிய அணி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான், பிரித்வி ஷா, சிம்ரன் ஹெட்மையர், ரிஷப் பண்ட் உடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் களமிறங்கும் பட்சத்தில் ஸ்டீவ் ஸ்மித் இடம் கேள்விக்குறியாகும். நோர்ஜே மற்றும் ரபாடா ஜோடி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 52 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்களது துணை டெல்லி அணிக்கு இந்த ஆண்டு இறுதியிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நடந்து முடிந்துள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மீதமுள்ள 6 போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலே டெல்லி அணி நிச்சயமாக முதல் இரண்டு இடங்களை பிடித்து விடம்
எனவே டெல்லி அணி இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நாம் நம்பலாம்.