பஞ்சாப் கிங்ஸ்
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடந்த முதல் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்த அணியாக பஞ்சாப் அணி இருந்தது. இருப்பினும் அதற்கடுத்த 7 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகள் வெற்றி பெற்றது. கடைசி இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்த காரணத்தினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.

எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து எப்படி விளையாட வேண்டும் என்கிற ஒற்றை பஞ்சாப் அணிக்கு நன்றாக தெரிந்திருக்கும். இந்த ஆண்டு மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் நான்கு முதல் ஐந்து போட்டிகள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது.
கிறிஸ் கெயில், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், என அதிரடியான பேட்டிங் வரிசை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பவுலிங்கில் ஜோர்டான், முகமது ஷமி, மெராடித் மற்றும் ஜய் ரிச்சர்ட்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றார்கள்.
அதேபோல ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்பிரீட் பிரார் என திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கையில் நிச்சயமாக இந்த அணி தன்னுடைய அதிரடியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.