உம்ரான் மாலிக்
2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய அபாரமான வேகத்தால் அனைவரையும் ஆச்சாரத்திற்குள்ளான உம்ரன் மாலிக் ஆஸ்திரேலிய மைதானத்தில் சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுனில் கவாஸ்கர், ஹர்பஜன்சிங் போன்ற முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் உம்ரான் மாலிக்கை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் இவரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.