ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் தொடரை இழந்தது. தற்போது 3வது ஒருநாள் போட்டி கேன்பரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி நான்கு வீரர்களை மாற்றம் செய்துள்ளது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் வெளியே அமர வைக்கப்பட்டு சுப்மன் கில் அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார். சமி வெளியில் அமர்த்தப்பட்டு தாகூர் உள்ளே வந்திருக்கிறார். நவ்தீப் சைனி வெளியே வருத்தப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராசன் இந்த போட்டியில் அறிமுகமாகிறார். மேலும் சஹல் க்கு பதிலாக குல்தீப் உள்ளே வந்திருக்கிறார்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணி மூன்று மாற்றங்கள் செய்திருக்கிறது. துவக்க வீரர் வார்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியதால் இன்றைய போட்டியில் மார்னஸ் லபுச்சனே துவக்க வீரராக களம் இறங்க உள்ளார். அதேபோல் இன்றைய போட்டியில் பேட் கம்மின்ஸ் இல்லாததால் சீன் அபாட் இந்த இடத்தை நிரப்ப இருக்கிறார். மேலும் அஷ்டான் அகர், கேமரா க்ரீன் இருவரும் உள்ளே எடுத்து வரப்பட்டு இருக்கின்றனர்.
இன்றைய போட்டியில் ஆடும் இந்திய அணி:
ஷிகர் தவான், சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, டி நடராஜன்
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மார்னஸ் லாபுசானே, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், சீன் அபோட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்