கேரி சோபர்ஸ் – 8 சதங்கள்
மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் கேரி சோபர்ஸ் இந்திய அணிக்கு எதிராக 8 சதங்கள் குவித்திருக்கிறார். 1954 முதல் 1974 வரை மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக 30 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 1920 ரன்கள் குவித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக இவ்வளவு டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 83.47 ஆகும். அதே சமயம் இந்திய அணிக்கு எதிராக 7 அரை சதங்களும் குவித்திருக்கிறார். ஒரு இன்னிங்சில் இந்தியாவுக்கு எதிராக இவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 198 ஆகும். மேலும் இந்தியாவுக்கு எதிராக தனது பந்துவீச்சில் 18 டெஸ்ட் போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும்
கைப்பற்றி இருக்கிறார்.

கேரி சோபர்ஸ் மொத்தமாக தனது டெஸ்ட் கேரியரில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7999 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் ஆவெரேஜ் 34.03 ஆகும். அதேசமயம் பந்துவீச்சில் இவர் மொத்தமாக கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 235 என்பது குறிப்பிடத்தக்கது.