விவியன் ரிச்சர்ட்ஸ் – 8 சதங்கள்
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரரான இவர் இந்திய அணிக்கு எதிராக இவரும் 8 சதங்கள் குவித்திருக்கிறார். 1974 முதல் 1996ஆம் ஆண்டு வரை மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
இந்திய அணிக்கு எதிராக நாற்பத்தி ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1927 ரன்கள் குவித்திருக்கிறார். அதில் 8 சதங்களும், 7 அரை சதங்களும் அடங்கும். இந்திய அணிக்கு எதிராக இவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 50.71 ஆகும். ஒரு இன்னிங்சில் இவர் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 192 ரன்கள் அடித்து இருக்கிறார்.

மொத்தமாக 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8540 ரன்கள் இவர் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 50.23. டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக இவர் 24 சதங்களும் அதேபோல 45 அரை சதங்களும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.