ரிக்கி பாண்டிங் – 8 சதங்கள்
ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிராக 8 சதங்கள் குவித்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2555 ரன்கள் குவித்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 54.36 ஆகும்.
இந்திய அணிக்கு எதிராக மொத்தமாக 8 சதங்களும், அதேசமயம் 12 அரை சதங்களும் ரிக்கி பாண்டிங் குவித்திருக்கிறார். ஒரு இன்னிங்சில் இந்திய அணிக்கு எதிராக ரிக்கி பாண்டிங் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 257 ஆகும்.

மொத்தமாக ரிக்கி பாண்டிங் தன்னுடைய டெஸ்ட் கேரியரில், 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,378 ரன்கள் குவித்திருக்கிறார்.டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவேரேஜ் 51.85 ஆகும். அதே போல மொத்தமாக ரிக்கி பாண்டிங் தன்னுடைய டெஸ்ட் கேரியரில் 41 சதங்களும், அதேசமயம் 62 அரை சதங்களும் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.