கல்யாணம் ஆன பெண்களை திருமணம் செய்த 4 புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்!

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், அது நம்மைப்போல் சாதாரண மனிதர்களுக்கு மட்டுமில்லை புகழபெற்ற பல மனிதர்களுக்கு தான் என்பதை நிரூபித்துள்ளனர். இதனால் பல சர்ச்சைகளும் ஏற்ப்படுவது வழக்கமான ஒன்று தான்.

தற்போது ஏற்கனவே திருமணமான பெண்களை திருமணம் செய்த 4 கிரிக்கெட் வீரர்கலைப் பற்றிப் பார்ப்போம் :

1.உபுல் தரங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தில்ஷன்  சில வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி நிலாங்கா விதானகேயை பிறிந்தார்.

மேலும், கொழும்பு நீதிமன்றத்தில் இருவரும் கோர்ட்டில் விவாகரத்து பெற்றுவிட்டனர் அதன் பின்பு தில்ஷன் டிவி நடிகை மஞ்சுளா திலினியை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தில்ஷனின் முன்னாள் மனைவி நிலாங்கா விதானகேயை மற்றொரு இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவை காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்,
  தொடக்க ஆட்டக்காரரகவும் உபுல் தரங்கா விளையாடி வருகிறார்.

2.முரளி விஜய்

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்துக் கண்டார். நிகிதா முரளி விஜய் மீது காதலில் விழ. இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

 

சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் போது இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருந்தனர். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம் இருவருக்கும் மனகசப்பை ஏற்படுத்தி விட்டது.

கடந்த 2007ம் ஆண்டு தினேஷ் கார்த்திக், நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2012ம் ஆண்டு ஐபிஎல்-5வது சீசனின் போது நிகிதா முரளிவிஜயை சந்தித்திருக்கிறார்.

இவர்களது சந்திப்பு காதலில் முடிய, அதன் மூலம் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த தினேஷ் கார்த்திக் நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் முரளிவிஜய்யும் நிகிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தினேஷ் கார்த்திக் மனதளவில் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சில காலம் பாதிக்கப்பட்டது.

பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார்.

3.சிகர் தவான்

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானின் பேஸ்புக் மூலம் வளர்ந்த காதல் கதை இது. ஹர்பஜன் சிங்கின் பேஸ்புக் நண்பர்களில் ஒருவராக இருந்தவர் ஆயிஷா முகர்ஜி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்தார். இவர் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவருக்கு ‘பிரண்ட் ரெக்வஸ்ட்’ கொடுத்த தவான், அதை ஏற்றுக்கொண்டதும் அவருடன் நல்ல நண்பராக பேசத்தொடங்கினார்.

அப்போதுதான் நிறைய விஷயங்களில் இருவரின் ரசனையும் ஒன்றுபோல் இருப்பது தெரியவந்தது. இருவருமே விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

எனவே, வழக்கம் போல நட்பு, காதல் என்ற அடுத்தகட்டத்தை அடைந்தது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 2009-ல் நிச்சயிக்கப்பட்டு, 2012ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது ஆயிஷாவுக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவானை விட 10 வயது மூத்தவரான ஆயிஷாவுடன் 2012-ல் திருமணம்  நடந்தது. ஆயிஷாவிற்கு முதல் திருமணத்தில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது புதிதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அதற்கு காதல் தம்பதிகள் ‘ஜோராவர் தவான்’ என்று பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

1.அணில் கும்ளே

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ளே கூட இந்த வரிசையில் வருகிறார்.

ஆம், இவருடைய முதல் திருமணம் விவகாரத்தில் முடிய பின்னர் ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்யும் ஒருவருடன் இரண்டாவது திருமணம் செயது கொண்டார்.

அவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகி இருந்தது குறிப்பிடதக்கது.

Editor:

This website uses cookies.