2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ளதால் அந்த அணியின் எந்த வீரர்கள் விளையாடுவார்கள் யார் அந்த அணியின் கேப்டனாக இருப்பார்கள், மேலும் அந்த அணியின் பயிற்சியாளராக யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்ற கேள்வி கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் எழும்பியுள்ளது.
இந்நிலையில் அந்த புதிய இரண்டு அணிகளின் கேப்டனாக ஆவதற்கு இந்த 4 வீரர்களுக்கு தான் வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.
அப்படிப்பட்ட 4 வீரர்களைப் பற்றி இனி காண்போம்
ரவிச்சந்திர அஸ்வின்
டெல்லி கேப்பிடல் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் தக்கவைத்துக்கொள்ள படமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இவர் 2022 ஐபிஎல் தொடரில் வருகிற 2 புதிய அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஏற்கனவே இவர் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டன் பதவியை ஏற்று வழி நடத்தியதால், நிச்சயம் ஏதேனும் ஒரு அணி இவரை தங்களது அணியின் கேப்டனாக நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
