ஷெஃபாலி வர்மா – 159 ரன்கள்
17 வயதான ஷெஃபாலி வர்மா சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிறைய சாதனைகளை செய்து வருகிறார். இந்திய மகளிர் அணியில் விளையாடி வரும் இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 96 ரன்களும் அதேபோல இரண்டாவது இன்னிங்சில் 63 ரன்கள் குவித்து மொத்தமாக 159 ரன்கள் அந்த டெஸ்ட் போட்டியில் குவித்துள்ளார்.

தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே மிக அற்புதமாக விளையாடி அனைவரது நற்பெயரையும் இவர் தற்பொழுது பெற்றுள்ளார். முதலில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் விளையாடிய இந்திய மகளிர் அணி, ஓபனிங் ஜோடி ஸ்மிருதி மந்தனா (78) மற்றும் ஷெஃபாலி வர்மா (96) துணையோடு 231 ரன்கள் குவித்தது.
பாலோ ஆன் முறையில் இந்திய மகளிர் அணி மீண்டும் பேட்டிங் செய்தது. கிட்டத்தட்ட இந்திய மகளிர் அணி தோற்று விடும் என்று நினைத்த வேளையில், இரண்டாவது இன்னிங்சில் ஆரம்பத்தில் ஷெஃபாலி வர்மா 63 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பின்னர் சினே ராணாவின் 80 ரன்களும், தனியா பாட்டியா இறுதி வரை ஆட்டமிழக்காமல் அடித்த 44 ரன்களும் இந்திய மகளிர் அணியை இறுதிவரை தூக்கிப் பிடித்தது. அதன் காரணமாக 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்து போட்டியை சமன் செய்தது.