ரோஹித் ஷர்மா – 177 ரன்கள்
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா களம் இறங்கினார். அதே போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 453 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய ரோஹித் ஷர்மா 177 ரன்கள் குவித்தார். அதே போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 124 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் மீண்டும் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ஷமி மிக அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை அற்புதமாக கைப்பற்றி, மொத்தமாக அந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை முகமது ஷமி கைப்பற்றினார்.
போட்டியின் இறுதியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியைவீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இறுதியில் ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் ஷர்மா தற்போது வரை 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2649 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய பட்டிங் ஆவெரேஜ் 46.47 ஆகும். தன்னுடைய டெஸ்ட் கேரியரில் தற்பொழுது வரை ரோஹித் ஷர்மா 1 இரட்டை சதமும், 7 சதங்களும் அதேபோல 12 அரை சதங்களும் குவித்திருக்கிறார்.