ஷிகர் தவான் – 187 ரன்கள்
2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் தவான் களமிறங்கினார். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 408 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 92 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 99 ரன்களும் அற்புதமாக குவித்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஓபனிங் ஜோடி முரளி விஜய் ஷிகர் தவான் தக்க பதிலடியை ஆஸ்திரேலிய அணிக்கு கொடுத்தனர். அந்த போட்டியில் முரளி விஜய் 153 ரன்களும் ஷிகர் தவான் 187 ரன்கள் குவித்தார்கள். அதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, போட்டியின் இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் ஷிகர் தவான் களமிறங்கவில்லை. எனினும் போட்டியின் முடிவில், அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2315 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 40.61 ஆகும். தன்னுடைய டெஸ்ட் கேரியரில் இதுவரை ஷிகர் தவான் 7 சதங்களும், அதேசமயம் 5 அரை சதங்களும் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.