கிரிக்கெட் வர்ணனை என்பது ஒரு தனித்துவமான கலை ஆகும்,ஒரு போட்டியை ஒரு சிறந்த வர்ணனையுடன் பார்ப்பதற்கு மிகவும் உற்சாகமாகவும் ஆரவாரமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் உலக கோப்பை தொடரில் தோனி இறுதியாக அடித்த சிக்சரை (தோனி பினிஷேஸ் ஆப் ஹிஸ் டைல்) என்ற வர்ணனை இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது.
இருந்தபோதும் சில கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு ஈடுபாடு இருக்காது அவர்களின் மீது பெரிய விருப்பமும் இருக்காது அப்பேர்பட்ட 4 கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பற்றி இங்கு காண்போம்.
ரசல் அர்னால்டு
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல் அர்னால்டு 1997 முதல் 2007 வரை இலங்கை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர், இவர் 44 டெஸ்ட் போட்டிகளிலும் 150 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 1 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருக்கிறார். இந்நிலையில் தனது ஓய்விற்குப் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக திகழ்ந்த அர்னால்டு பல போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் 2018இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4-வது நாள் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதை கிண்டல் செய்யும் விதமாக “டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் தானே” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியை கலாய்க்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.இந்த பதிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இதன்காரணமாக ரசல் அர்னால்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
