டீன் ஜோன்ஸ்
1984 முதல் 1994 வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய பீம்ஸ்ஸ் மிக சிறந்த முறையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியை பல முறை வெற்றி பெறச் செய்தார்.இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். பின் தனது ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக திகழ்ந்த டீன் ஜோன்ஸ் சவுத்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஹசிம் அம்லா குறித்து தவறான கருத்துக்களை தனது வர்ணனையின் மூலம் தெரிவித்தார்.
2006 இல் இலங்கை மற்றும் சவுத்ஆப்பிரிக்கா இடையிலான போட்டியில் குமார் சங்கக்கார அடித்த பந்தை ஹாசிம் அம்லா கேட்ச் பிடித்தார், அப்பொழுது வர்ணனையாளராக இருந்த டீன் ஜோன்ஸ் “தீவிரவாதி இன்னொரு விக்கெட்டை வீழ்த்தி விட்டார்” என்று கூறினார் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்நிலையில் 24 செப்டம்பர் 2010 அன்று மும்பையில் ஹார்ட் அட்டாக் மூலம் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
