Use your ← → (arrow) keys to browse
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
இந்திய அணியின் முன்னாள் வீரரும் மற்றும் சர்ச்சைக்குரிய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அடிக்கடி தனது வார்த்தையால் சர்ச்சையில் சிக்கி வைரலாகி வருவார்.இந்நிலையில் 2019 இல் நடந்த உலக கோப்பை தொடரில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவை கடுமையாக விமர்சித்தார் இதனை பழிதீர்க்கும் வகையில் ரவீந்திர ஜடேஜா நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அமைதியாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தக்க பதிலடி கொடுத்தார்.
மேலும் ரவீந்திர ஜடேஜா மட்டுமல்லாமல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்தும் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இவருடைய வர்ணனை மிகவும் வெறுப்புக்குரிய ஒன்றாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse