ஆஸ்திரேலியத் தொடருக்கு அணியில் இடம் கிடைக்கக் கூடிய 4 இளம் வீரர்கள்
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் வரும் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. அதற்க்கான இந்திய அணி இன்று அற்விக்கப்படவுள்ளது. ஆஸ்திரேலியத்
அந்த அணியில் சில இளம் புதுமுக வீரர்களை எதிர் பார்க்கலாம்,
அவ்வாறு இடம் பெறக்கூடிய 4 இளம் வீரர்கள்,
1.ரிசப் பாண்ட்
அற்புதமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பாண்ட் அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் இவர் சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான போட்டியில் சரியாக செயல்படாததால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவர் கடந்த கோப்பை தொடரில் அபாரமாக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்காகவே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்களாம்.
கடந்த ரஞ்சி கோப்பையில் 8 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 972 ரன்களை குவித்துள்ளார். அதில் 4 சதங்களும் 2 அரை சதங்களும் அடங்கும்.
19 வயதே ஆன இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் தன்னுடைய டி20 அறிமுக போட்டியை கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த போட்டியில் ஆடினார்.
அதற்கு பின்பு மேற்கிந்திய தீவுகள் உடன் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இன்னும் சில வாய்ப்புகள் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
2.வாசிங்டன் சுந்தர்
17 வயதேயான இளம் தமிழக வீரர் வாசிங்க்டன் சுந்தர். கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் புனே அணிக்காக சுழற்ப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo by Shaun Roy – Sportzpics – IPL
கடந்த விஜய் ஹசாரே ட்ராபி மற்றும் தியோதர் கோப்பையில் தமிழக அணி பட்டம் வென்றது. அந்த அனியில் முக்கியாமான் வீரராக திகழ்ந்தார் சுந்தர். அந்த இரு தொடர்களிலும் சேர்த்து 9 போட்டிகஈல்ல் விளையாடியுள்ள அவர் வெறும் 12 சராசரியில் 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3.93 என சிக்கனமாகவும் ஓந்து வீசியுள்ளார்.
3.ஜயதேவ் உனத்காட்
இந்திய அணியின் வேகபந்து வீச்சுப் பட்டரை நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால், ஒரு சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சு இரு அது அணிக்கு இன்னும் வலு சேர்க்கும்.

Photo by Shaun Roy – Sportzpics – IPL
அந்த வகையில் பார்த்தால் தற்போது உள்ளூர் போட்டிகளில் ஜொலித்து வரும் ஜயதேவ் உனத்காட் சிறந்தவராக உள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், 2015-16 ரஞ்சி சீசனில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதே போல் ஐ.பி.எல் தொடரிலும் 12 போட்டிகளில் ஆடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன் சராசரி 13.41 ஆகும்.
4.சித்தார்த் கௌல்
விராட் கோலி தலைமையிளான 19 வயதிற்க்குட்பட்டோருக்கான அணி 2008ல் உலகக்கோப்பையை வென்றது. அந்த அணியின் பந்து வீச்சு தூணாக விளகியவர் சித்தார்த் கௌல்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்கவில் நடந்த ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் சித்தார்த் கௌல்.
ஐ.பி.எல் தொடரில் ஹைதாராபத் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த வருட ரஞ்சிக் கோப்பையில் பஞ்சாப் அணியின் அதிக விக்கெட் வீழ்த்தியவரும் இவரே. 8 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சித்தார்த் கௌல்.
வியஜ் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.