6. ரிஷப் பண்ட்
விக்கெட் கீப்பிங், பேட்டிங் என இரண்டிலும் கடுமையாக சொதப்பி வந்த தினேஷ் கார்த்திக் க்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் பண்ட். பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், கீப்பிங்கில் அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி, அறிமுக போட்டியிலேயே மொத்தம் 7 கேட்ச்கள் பிடித்து ஆச்சர்யமூட்டினார். ஆதலால், அணியில் இவரது இடத்திற்கு தற்போது எந்தவித பாதிப்பும் இராது.