7. ரவிந்திர ஜடேஜா
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக இருந்தாலும், முதல் மூன்று போட்டிகளில் அஸ்வின் ஆடியதால் இவருக்கு இடமில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பயிற்சியின் போது அஸ்வினுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. ஆனால், முதல் இரண்டு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவரை அணி நிர்வாகம் முன்றாவது போட்டியிலும் ஆட வற்புறுத்தியது.
தற்போது, அவரின் இடுப்பு பகுதி காயம் தீவிரமடைந்ததால் நான்காவது போட்டியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஜடேஜா ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.