75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து மாஸ் காட்டிய ஐந்து முக்கிய வீரர்கள் !! 1

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் 100க்கும் குறைவான பந்துகளில் சதம் அடிப்பது என்பது இன்னும் கடினமான ஒரு விஷயம்.

அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஷாஹித் அப்ரிடி – 4 முறை

சாகித் அப்ரிடி உலக வரலாற்றில் இவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.பாகிஸ்தானை சேர்ந்தவர், பிரபல்யமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இவரை செல்லமாக லாலா என்றும் அழைப்பார்கள்.

75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து மாஸ் காட்டிய ஐந்து முக்கிய வீரர்கள் !! 2

 

 

இவர் மிகச்சிறந்த பௌலிங் line-upயும் துவம்சம் செய்யும் திறன் படைத்தவர். அப்ரிடி 398 ODI போட்டிகளில் பங்கேற்று ஆறு முறை சதம் அடித்துள்ளார். அதில் 4 முறை 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடந்த ODI தொடரில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனையாக இருந்தது.

சனத் ஜெயசூர்யா – 5 முறை

ஸ்ரீலங்காவின் ஓபனர் ஆன ஜெயசூர்யா கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அடையாளத்தைப் படைத்துள்ளார். லெஃப்ட் ஹண்ட் பேட்ஸ்மேனான இவர் தனது அணிக்காக பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து மாஸ் காட்டிய ஐந்து முக்கிய வீரர்கள் !! 3
இவர் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 14 முறை சதம் அடித்துள்ளார்.ODI போட்டிகளில் மிகச்சிறப்பான பங்காற்றிய இவரின் ஸ்ட்ரைக் ரேட் 90க்கும் அதிகமாகவே இருந்தது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 28 சதங்கள் அடித்துள்ள சனத் ஜெயசூர்யா அதில் ஐந்து சதங்களை 75ற்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார்.

விரேந்திர சேவாக் – 7 முறை

இந்திய வீரரான சேவாக் பவுலர்களை அச்சுறுத்தக் கூடிய வகையிலான பேட்ஸ்மேன். பவுலர்கள் பந்து போடுவதற்கு அஞ்சும் வகையில் இவரது ஆட்டம் இருக்கும்.உலக கிரிக்கெட் வரலாற்றில் பிரபல்யமான வீரர்களில் ஒருவரான இவர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகமான மூன்று சதம் அடித்த வீரர்களில் ஒருவர்.
75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து மாஸ் காட்டிய ஐந்து முக்கிய வீரர்கள் !! 4
மற்றும் ODI தொடரில் இரட்டை சதம் அடித்த சில வீரர்களில் இவரும் ஒருவர். இது போன்ற பல சாதனைகளை பெற்ற இவர் தனது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 38 முறை சதம் அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஏழு முறை 75 இற்கும் குறைவான பந்துகளில் சதம் அடித்துள்ளார். இவரைப்போன்ற வீரரை இனிமேல் காண்பது ஒரு அரிதான விஷயமாக இருக்கும்.
ஜாஸ் பட்லர் – 7 முறை
தற்போதைய இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் இவரும் ஒருவர். Right-hand பேட்ஸ்மேனாக இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் இதுவரை ஒரு சதம் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதும் ODI தொடரில் 9 சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச T20 தொடரில் சதம் அடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து மாஸ் காட்டிய ஐந்து முக்கிய வீரர்கள் !! 5
CARDIFF, WALES – JUNE 16: Jos Buttler of England bats during the 2nd Royal London ODI between England and Australia at SWALEC Stadium on June 16, 2018 in Cardiff, Wales. (Photo by Gareth Copley/Getty Images)
சர்வதேசகிரிக்கெட் தொடரில் இவர் அடித்த 10 சதங்கள் இல் 7 சதம் 75 இற்கும் குறைவான பந்துகளில் எடுக்கப்பட்டதாகும்.
டிவில்லியர்ஸ் – 9 முறை
சூப்பர் மேன், mr360, போன்ற பட்டங்களுக்கு சொந்தக்காரரான AB டிவில்லியர்ஸ்,  கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வீரர். இவரின் பேட்டிங் ஸ்டைலை பார்த்து பல ஜாம்பவான்களும் வியந்து போனார்கள்.
75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து மாஸ் காட்டிய ஐந்து முக்கிய வீரர்கள் !! 6
இவரை போன்ற ஒரு வீரரை இனி உலகம் கண்டிராத அளவுக்கு இவரின் ஆட்டம் பார்ப்பவரின் மனதை கவரும் வகையில் இருக்கும். இவர் அதிவேகமான 50,100,150 ரன்களை அடித்து ODI தொடரில் பல சாதனைகள் படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள ஏ.பி டிவில்லியஸ் அதில் 9 சதங்களை 75 பந்துகளுக்குள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *