கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை யில் ஒவ்வொரு வீரருக்கும் சதம் அடிப்பது மிகப்பெரிய கனவு. எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்தாலும் தங்களுடைய கிரிக்கெட் கேரியரில் அதிக சதங்கள் குவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதில் ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே நிறைய சதங்கள் குவிக்க வாய்ப்பு கிடைக்கும்.
1877 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடப்பட்டது. முதல் போட்டி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் விளையாடிய சார்லஸ் பானர்மேன் 165 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக சர்வதேச போட்டிகளிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் சதம் அடித்த வீரர் அவர் ஆனார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடை பெற்றது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டென்னிஸ் அமிஸ் முதல் சதம் அடித்தார். அதேசமயம் டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் கிறிஸ் கெய்ல் முதல் சதத்தை உலக கோப்பை டி20 தொடரில் 2007 ஆம் ஆண்டு அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 21ஆம் நூற்றாண்டில் அதிக அளவில் சர்வதேச தினங்களை குறித்த டாப் 5 சிறந்த கிரிக்கெட் வீரர்களை, அந்த ஐந்து வீரர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்
ஜாக்ஸ் காலிஸ் – 50
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் 50 சதங்கள் குவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆயிரத்து 95 ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை விளையாடி இருக்கிறார்.
இவர் தனது வாழ்நாளில் மொத்தமாக 62 ரன்கள் குவித்திருக்கிறார், இதில் டெஸ்ட் போட்டிகளில் 45 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் டெஸ்ட் போட்டிகளில் 58 அரை சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 86 அரை சதங்களும் குவித்திருக்கிறார்.

ஜாக்ஸ் காலிஸ் சர்வதேச அளவில் 519 போட்டிகளில் விளையாடி 25,534 ரன்கள் குவித்திருக்கிறார்.166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,289 ரன்களும் 328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,579 ரன்களும், அதேசமயம் 25 டி20 போட்டிகளில் விளையாடி 666 ரன்கள் குவித்திருக்கிறார்.