ரிக்கி பாண்டிங் – 58
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான இவர் 58 சதங்களை 21ம் நூற்றாண்டில் குவித்திருக்கிறார். 1995ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி இருக்கிறார்.இவர் தனது கிரிக்கெட் கேரியரில் 71 சதங்கள் சர்வதேச அளவில் குவித்திருக்கிறார். மேலும் சர்வதேச அளவில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக சச்சின் டெண்டுல்கரை பின்தொடர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 30 சனங்களும் குவித்திருக்கிறார்.அதேசமயம் சர்வதேச அளவில் 146 அரை சதங்களும் குவித்திருக்கிறார். இவர் அடித்த மொத்த சர்வதேச ரன்கள் 27,483 ஆகும்.
168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,378 ரன்களும் 375 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,704 ரன்கள் குவித்திருக்கிறார். அதேசமயம் 17 டி 20 போட்டிகளில் விளையாடி 401 ரன்களும் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.