குமார் சங்ககாரா – 63
குமார் சங்ககாரா 21ம் நூற்றாண்டில் ஸ்ரீலங்கா அணிக்காக விளையாடி 63 சர்வதேச சதங்களை குவித்திருக்கிறார் . 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரை மொத்தமாக 28,016 ரன்கள் சர்வதேச அளவில் இவர் குவித்திருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 25 சதங்களையும் குவித்திருக்கிறார். அதேசமயம் டெஸ்ட் போட்டிகளில் 52 அரை சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 93 அரை சதங்களும், டி20 போட்டிகளில் 8 அரை சதங்களை குவித்திருக்கிறார்.134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ரன்கள், 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14, 234 ரன்களும் அதேசமயம் 56 டி20 போட்டிகளில் விளையாடி 1382 ரன்கள் குவித்திருக்கிறார்.