Use your ← → (arrow) keys to browse
விராட் கோலி – 70
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி 21ம் நூற்றாண்டில் 70 சதங்கள் குவித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட தொடங்கி இன்றுவரை மொத்தமாக 70 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச அளவில் அதிக சதங்கள் அடித்த 3வது வீரராக சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாண்டிங்க்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களும் இவர் குவித்திருக்கிறார். அதேசமயம் சர்வதேச அளவில் 115 அரை சதங்களை குவித்திருக்கிறார். விராட் கோலி 91 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7490 ரன்களும், 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,169 ரன்களும் 90 டி20 போட்டிகளில் விளையாடி 3159 ரன்கள் குவித்திருக்கிறார். மொத்தமாக சர்வதேச அளவில் இதுவரை 22,818 ரன்கள் குவித்திருக்கிறார்.
Use your ← → (arrow) keys to browse