டி20 போட்டிகளில் ஒப்பிட்டு பார்த்தால் ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு 6 ஓவர்கள் அதிகமாக கிடைக்கும். மொத்தமாக அவர்கள் 10 ஓவர்கள் வரை வீசலாம். இதன் காரணமாகவே ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பந்துவீச்சாளர்கள் கைப்பற்றுவார்கள். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் 534 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் வாசிம் அக்ரம் ( 502 விக்கெட்டுகள் ) மற்றும் மூன்றாவது இடத்தில் வக்கார் யூனிஸ் ( 416 விக்கெட்டுகள் ) இருக்கின்றார்கள்.
ஒருநாள் போட்டிகளில் மொத்த விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியல் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலைப் பற்றி அவ்வளவாக அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வீரர்கள் பட்டியலைப் பற்றி தற்போது பார்ப்போம்.
அனில் கும்ப்ளே 1996 (61 விக்கெட்டுகள்)
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு மிக சிறப்பாக அணில் கும்ப்ளே பந்து வீசி இருக்கிறார். அதன் காரணமாகவே இந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு 32 ஒருநாள் போட்டிகளில் அணில் கும்ப்ளே விளையாடி இருக்கிறார். அந்த வருடத்தில் இவருடைய பௌலிங் அவரேஜ் 20.64 மற்றும் எக்கானமி 4.06 மட்டுமே. மேலும் அந்த வருடத்தில் அவர் மூன்று போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அனில் கும்ப்ளே மொத்தமாக 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.