ஷேன் வார்னே 1999 (62 விக்கெட்டுகள்)
ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே. இவர் 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 62 விக்கட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
1999 ஆம் ஆண்டு இவர் விளையாடிய 37 ஒருநாள் போட்டிகளில் இவருடைய பௌலிங் எக்கானமி 4.28 ஆகும். அதேசமயம் இந்த வருடம் விளையாடிய அவரது பவுலிங் அவரேஜ் 23.27 ஆகும். அதேசமயம் இந்த வருடத்தில் அவர் இரண்டு முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஷேன் வார்னே மொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.