சக்லின் முஸ்தாக் 1996(65 விக்கெட்டுகள்)
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஸ்தாக் ஆப் ஸ்பின் பவுலிங் போட கூடிய ஒரு வீரர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு மொத்தமாக 65 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார்.
அந்த ஒரு வருடத்தில் இவர் மொத்தமாக 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 65 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த வருடத்தில் அவருடைய பௌலிங் அவரேஜ் 19.52 மற்றும் எக்கானமி 4.39 ஆகும். அதேசமயம் இந்த ஒரு வருடத்தில் அவர் இரண்டு முறை 4 விக்கெட்டுகளையும் அதேசமயம் இரண்டு முறை 5 விக்கெட்டுகளையும் ( 5 விக்கெட் ஹால் ) கைப்பற்றி இருக்கிறார்.

இவர் பாகிஸ்தான் அணிக்காக மொத்தமாக 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 288 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.