மேத்யூ சிங்க்ளேயர்
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மேத்யூ 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 1999 ஆம் ஆண்டு முதல் 2009 வரை நியூசிலாந்து அணிக்கு விளையாடிய மேத்யூ பல முறை சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் 2013ம் ஆண்டு ஓய்வு அறிவித்த மேத்யூ வேலை இல்லாமல் தவித்ததாக தெரிவித்திருக்கிறார்.இவர் தனது படிப்பை முடிக்காததால் இவருக்கு சிறந்த வேலை கிடைக்கவில்லை என்று தெரிவித்த மேத்யூ, எட்டு மாதங்கள் விளையாட்டு சாதனங்கள் விற்கும் கடையில் வேலை பார்த்துள்ளதாக தெரிவித்தார். அதன் பின் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக திகழ்ந்து வருகிறார். தற்பொழுதும் கிளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
