பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் அக்தர் கடந்த 18 வருடத்திற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் செய்த சாதனையை இன்றுவரை எந்த ஒரு பந்து வீச்சாளர்களும் நெருங்க முடியவில்லை.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 161.3km/hr வேகத்தில் பந்துவீசி ஷாகிப் அக்தர் வரலாற்று சாதனை படைத்தார், இந்த ஒரு சாதனையை முறியடிக்க வேண்டும் என்று அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முயற்சி செய்து இன்றுவரை தோல்வியை மட்டுமே தழுவி வருகின்றனர்.
இருந்தபோதும் சமகால கிரிக்கெட் தொடரின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களாக கருதப்படும் இந்த ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தான் சாகிப் அக்தரின் சாதனையை முறியடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
அப்படிப்பட்ட 5 வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி இங்கு காண்போம்.
ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது அபாரமான வேகத்தின் மூலம் சமகால கிரிக்கெட் தொடரின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழும் அனைவரும் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
எந்த ஒரு சிரமமும் படாமல் 150 kmph வேகத்தில் பந்துவீச கூடிய திறமை படைத்த இவர்,அதிகபட்சமாக 153.62kmph வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். இவருக்கு பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சாகிப் அக்தரின் சாதனையை முறியடிக்கக் கூடிய திறமை இவரிடம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
