ரஜத் படிதார்.
கடந்த இரண்டு வருடங்கள் ஆனது உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிர்கால இந்திய அணி நட்சத்திர வீரராக உருவெடுப்பார் என பாராட்டை பெற்ற இளம் வீர ரஜத் படிதார், நடந்து முடிந்த 2023 ரஞ்சிக்கோப்பையில் ஏடு போட்டிகளில் விளையாடி ஒரு சதம் ஐந்து அரை சதம் உட்பட 556 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் புஜாரா அல்லது சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதிர்க்கு பதில் இவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வாய்ப்பு கொடுத்திருந்தால் ஒருவேளை இந்திய அணியை ஜெயிக்க வைத்திருப்பார் என கிர்க்கெட் வட்டத்தில் பேச்சு அடிபடுகிறது.