அபிமன்யு ஈஸ்வரன்.
கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் இந்திய அணியின் இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரன் நடந்து முடிந்த 2023 ரஞ்சிக்கோப்பையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 798 ரன்கள் குறித்து அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக வங்கதேச-A அணிக்கு எதிரான போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய அபிமன்யு ஈஸ்வரனுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஒருவேளை இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் இந்திய அணியில் விளையாடிய வீரர்களை விட இவர் சிறப்பாக விளையாடியிருப்பார் என இந்திய அணியின் சீனியர் வீரர்களை உசுப்பேத்தும் வகையில் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்களை தவிர்த்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முகேஷ் குமார் மற்றும் பால்டஜ் சிங் போன்ற இளம் வீரர்களுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.