ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் தங்களது நாட்டிற்காக ஒரு உலகக்கோப்பையாவது வென்றுவிட என்பது தான் அதிகபட்ச ஆசையாகவும், லட்சியமாகவும் இருக்கும்.
அதே போல் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தனது நாட்டிற்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும், அதில் சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை வெல்வதில் தனது பங்கு மற்ற வீரர்களை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதே மிகப்பெரும் லட்சியமாக இருக்கும்.
ஆனால், மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவும், தங்களது அணிகளின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்திருந்தாலும் ஒரு முறை கூட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடா வாய்ப்பே கிடைக்காத ஐந்து சிறந்த வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
5; இஷாந்த் சர்மா;
கடந்த 2007ம் ஆண்டு இந்திய அணியில் கால் பதித்த இஷாந்த் சர்மா, இன்றுவரை இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு இஷாந்த் சர்மாவிற்கு கிடைக்கவில்லை. இஷாந்த் சர்மா இந்திய அணிக்கு அறிமுகமானதில் இருந்து இதுவரை 4 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுவிட்ட போதிலும் இஷாந்த் சர்மாவிற்கான வாய்ப்பு ஒருமுறை கூட கிடைவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் விளையாடியதே இஷாந்த் சர்மா விளையாடிய மிகப்பெரும் போட்டியும். இஷாந்த் சர்மா இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.