2 – அலெய்ஸ்டர் குக்;
பலருக்கும் இந்த தகவல் ஆச்சரியமாக இருக்கலாம். தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து கிரிக்கெட் உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியின் அலெய்ஸ்டர் குக்கும் இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அலெய்ஸ்டர் குக் 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 3204 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அலெய்ஸ்டர் குக் 2015ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக திடீரென அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
