எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் உடற்தகுதி என்பது அவசியம். கிரிக்கெட்டில் தான் உடற்தகுதி மிக முக்கியம். பீல்டர்கள் பறந்து டைவ் அடிக்கவோ, பந்தை தடுக்க சுறுசுறுப்பாக ஓடவோ மற்றும் பந்தை அடித்து விட்டு ரன் எடுக்க வேகமாக ஓடவோ உடற்தகுதி மிக முக்கியம். முக்கியமாக ஒருவர் வேகப்பந்து வீச்சாளராக இருந்தால், ஒரு நல்ல வேகத்தில் வீச வேகமாக ஓடி வர வேண்டும். ஆனால், கடந்த சில வருடமாக இதற்கு மாறுபட்டு மிக அதிக எடை உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் விளையாடி உள்ளார்கள். அவர்களில் அதிக எடை உள்ள முதல் ஐந்து வீரர்களை பார்ப்போம்.
இன்சமாம் உல் அக் – 103 கிலோ
சந்தேகம் இல்லாமல் அவரது காலத்தில் இன்சமாம் உல் அக் மிக அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் என்று சொல்லலாம். இதனால் அதிக முறை ரன் அவுட் ஆகியுள்ளார் (40 முறை). 2003 உலக கோப்பைக்கு 10 கிலோ குறைந்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறினார். பாகிஸ்தான் அறிமுகம் செய்ய சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் தான். சச்சின் – லாரா அளவிற்கு விளையாடும் திறமை இவருக்கும் உள்ளது என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.