கோலின் மில்பர்ன் – 121 கிலோ
இங்கிலாந்தின் கோலின் மில்பர்ன் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒரு விபத்தில் அவரது கண் பார்வை குறைந்ததால், அவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியவில்லை. அவர் அடித்து விளையாடும் குணம் படைத்தவர். அவருக்கு இடது கண்ணின் பார்வை குறையாமல் இருந்திருந்தால், அவரது காலத்தில் இங்கிலாந்து அணியின் சிறந்த வீரராக வந்திருப்பார். ஒரு காலத்தில் அவருடைய எடை 121 கிலோ.