எந்த ஒரு விளையாட்டு போட்டியாக இருந்தாலும் ஒரு மிகத் திறமையான வீரரின் மூலம் அந்த அணி வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது, அப்படி திகழும் வீரருக்கு அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக பரிசு வழங்கப்படும்.
அதே போன்று கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மேன் ஆப் தி மேட்ச் என்ற பட்டமும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில் டி-20 தொடர்களில் 5 இந்திய வீரர்கள் அதிகமுறை மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்று விடுவார்கள் அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
5,எம்எஸ் தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக பல முறை சாதனை படைத்துள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிறந்த கேப்டன்ஷிப் மூலமும் பல முறை இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
மஹேந்திர சிங் தோனி இதுவரை டி20 தொடர்களில் 17 முறை மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார் அதிலும் குறிப்பாக 15 முறை ஐபிஎல் தொடர்களில் மிக சிறப்பாக செயல்பட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
