ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட வீரர்களில் அடுத்ததாக நாம் பார்க்கப் போவது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான்.
இந்திய மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த அளவிற்கு உகந்ததாக இல்லாததால் வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி ஆகிய இருவரும் போட்ட திட்டத்தின் அடிப்படையில், 2018 தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
