சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன்கள்
இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். 2009ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணியில் மிகச் சிறப்பாக விளையாடிய ஷான் மார்ஷ் 112 ரன்னும், ஷேன் வாட்சன் 93 ரன்னும், ரிக்கி பாண்டிங் 45 ரன்னும், கேமரூன் ஒயிட் 57 ரன்னும் அடித்திருந்தனர்.
அதன் பின்னர் விளையாடிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு மிக சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு துணையாக சுரேஷ் ரெய்னா 59 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 23 ரன்னும், அதேபோல விரேந்திர சேவாக் 38 ரன்னும் எடுத்து இருந்தாலும் இறுதியில் இந்திய அணி வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.