மேத்யூ ஹைடன் நியூசிலாந்து அணிக்கு எதிராக 181*
2007ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது அதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடிய மேத்யூ ஹைடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 181 ரன்கள் குவித்து இருந்தார். அவருக்கு துணையாக ஷேன் வாட்சன் 68 ரன்னும், பிராட் ஹாடின் 38 ரன்னும் குவித்தனர்.

அதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் அதன்பின்னர் கிரைக் மேக்மில்லைன் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் துணையால் அதிரடியாக விளையாடிய இறுதியில் வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே குவித்திருந்த நியூசிலாந்து அணி, கிரைக் மேக்மில்லைன் அடித்த 117 ரன்கள் காரணமாகவும், அதேபோல பிரண்டன் மெக்கல்லம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அடித்த 86 ரன்கள் காரணமாகவும் இறுதியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.