சார்லஸ் கவன்ட்ரி பங்களாதேஷிற்கு எதிராக 194*
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 312 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சார்லஸ் கவன்ட்ரி 191 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன் பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே மிக சிறப்பாக விளையாடியது. பங்களாதேஷ் அணையில் தமிம் இக்பால் 138 பந்துகளில் 158 ரன்கள் குவித்து பங்களாதேஷ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அவருக்கு துணையாக அனைத்து வீரர்களும் சிறந்த பங்களிப்பை வழங்க இறுதியில் பங்களாதேஷ் அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டிகளில் சதமடித்து தோல்வி பெற்ற இன்னிங்ஸ்களில், அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் சார்லஸ் கவன்ட்ரி இன்னும் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.