உலக கோப்பை தொடர் 1996
1996 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 287 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக நவ்ஜோத் சித்து அதிக ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக அஜய் ஜடேஜா இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு முன்னெடுத்துச் சென்றார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆமிர் சோஹைல் சிறப்பாக விளையாடி அரைசதம் குவித்தார், இருப்பினும் அவர் வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய ரன் அடிக்க தவறியதால் இறுதியில் பாகிஸ்தான் அணி இறுதியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.