சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் 2009
2009ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 302 ரன்கள் பாகிஸ்தான் அணி குவித்தது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சோயப் மாலிக் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். அதேபோல முகமது யூசப் அரைசதம் குவித்து அசத்தினார்.

அதற்கு பின்னர் விளையாடிய இந்திய அணி வீரர்கள் மிகப்பெரிய ரன் அடிக்க முடியாமல் தடுமாறினர்.இந்திய அணி சார்பாக ராகுல் டிராவிட் மட்டும் அற்புதமாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். எனினும் இறுதியில் அணி 54 ரன்கள் விதியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.