#3 இந்தியா vs ஜிம்பாப்வே டி20, ஹராரே 2016
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு தோனி முதல்முறையாக தலைமை தாங்கினார். அதில் ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. பின்னர் நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே 170/6 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மனிஷ் பாண்டே 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 46 பந்துகளில் 81 ரன்கள் தேவைப்பட்டபோது, அக்சர் படேல் 18 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 2வது பந்தில் வெளியேறினார்.
இறுதிவரை நிலைத்து ஆடிய தோணி கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்ததால் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.