#2 இந்தியா vs விண்டீஸ் டி20, லாடர்ஹில் 2016
ஜிம்பாப்வே தொடருக்கு பிறகு, விண்டீஸ் சென்ற இந்தியா டி20 தொடரில் ஆடியது. இரண்டாவது டி20 போட்டியில், விண்டீஸ் அணியின் துவக்க ஜோடி 9.3 ஓவர்களில் 126 ரன்கள் சேர்த்தது. லெவிஸ் 49 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தது. இறுதியாக, 20 ஓவர்களில் 245/6 ரன்கள் எடுத்திருந்தது.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கேஎல் ராகுல் மற்றும் தோனி ஜோடி 43 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது, முதல் பந்தில் தோனியின் கேட்சை தவறவிட்டார் சாமுவேல். பவுண்டரிகள் அடிக்க இயலாமல் திணறிய தோனி முதல் பந்தைப்போலவே கடைசி பந்தையும் அடிக்க முயற்சித்தபோது சாமுவேல் வசமே பிடிபட்டு அவுட் ஆனதால் விண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி தோல்வியுற்றபோதும் தோனி 23 பந்துகளில் 45 ரன்களும், ராகுல் 22 பந்துகளில் 57 ரன்கள் அடுத்தது பெரிதும் பேசப்பட்டது.