#1 விண்டீஸ் vs இந்தியா, ஒருநாள் போட்டி – ஆண்டிகுவா, 2017
2017ல் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்விக்கு பிறகு, இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வென்றது. 3வது போட்டியிலும் இந்தியா விண்டீஸ் அணியை 189/9 என கட்டுக்குள் கொண்டுவந்தது.
எளிய இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் ரஹானே அவுட் ஆகாமல் நிலைத்து ஆடிவந்தார். அவரும் 91 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டர்கள் பாண்டியா, ஜடேஜா இருவரும் ஒருசில பவுண்டரிகளை அடித்தாலும், இறுதிவரை நிலைத்து வெற்றியை பெற்றுத்தர இயலவில்லை.
இறுதிவரை இந்திய அணிக்கு தூணாக இருந்த தோனி, 109 பந்துகளில் அரைசதம் அடித்தார் இவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 47. இறுதி ஓவரில், இந்திய அணிக்கு 2 விக்கெட்டுகள் கையில் இருக்க 14 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இப்போட்டியில், இறுதிவரை போராடிய கேப்டன் தோனியின் ஆட்டம் பாராட்டை பெற்றது.