#2 ஹர்பஜன் சிங்

இவரது பெயரை இந்த பட்டியலில் காண்கையில் பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம், காரணம் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு விக்கெட் வீழ்த்துவதிலும் பவர் பிளே ஓவர்களிலும் முக்கிய பங்கு வகித்தார். 11 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தினார். சென்னை அணியின் பிட்ச் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் இவரால் சிறப்பாக செயல்பட முடிந்தது.
சென்னை மைதானத்தை பழைய மாதிரியாக கொண்டுவருமாறு பல பக்கங்களில் இருந்தும் விமர்சனங்கள் வருவதால், அடுத்த சீசனில் மைதானம் மாற்றப்படலாம். அப்போது, சென்னை அணிக்கு இவரின் பங்களிப்பு தேவைப்படாது. ஜடேஜா மற்றும் தாஹிர் மட்டுமே போதுமானது என நிர்வாகம் முடிவு செய்யலாம். காரணம், இருவருமே சர்வதேச போட்டிகளில் ஆடி வருகின்றனர்.