அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் சென்னை அணி தக்க வைக்கப் போகும் அந்த ஐந்து வீரர்கள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனோ காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்த வருட இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என பிசிசிஐ நம்பிக்கை அளித்துள்ளது. எனினும் சூழ்நிலையைப் பொருத்து தான் முடிவுகள் எடுக்கப்படும் அதனால் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடைபெறுமா நடைபெறாதா என்று தற்போதைக்கு உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும் பிசிசிஐ திட்டவட்டமாக கூறிவிட்டது.

ஒருவேளை ஐபிஎல் தொடரின் தவறும் நடைபெறவில்லை என்றால் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அனைத்து அணைகளும் தங்களது வீரர்களை வெளியிட்டு மொத்தமாக புதிய அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் ஒன்று நடத்தப்படும், அதில் ஒவ்வொரு அணியும் தங்களது பழைய அணியில் இருக்கும் 5 வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியாது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் தற்போது அணியில் உள்ள வீரர்களுள் எந்த 5 வீரர்களை தக்க வைக்கப் போகிறது என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சில கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுவதன் அடிப்படையில் இந்த 5 வீரர்களை தான் சென்னை அணி தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மகேந்திர சிங் தோனி

கண்டிப்பாக அடுத்த ஆண்டு தோனிதான் சென்னை அணியை தலைமை தாங்க போகிறார். இதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. நிச்சயமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் சென்னை அணிக்காக விளையாடுவார். 2008ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மிக அற்புதமாக சென்னை அணிக்காக விளையாடும் அதேசமயம் சென்னை அணி வீரர்களை ஒருங்கிணைத்து நன்றாக வழிநடத்தி மூன்று கோப்பைகளை சென்னை அணிக்காக பெற்று தந்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் சென்னை அணி தக்க வைக்கப் போகும் அந்த ஐந்து வீரர்கள் 1

எனவே நிச்சயமாக சென்னை அணிக்கு அடுத்து ஒரு நம்பிக்கை வாய்ந்த கேப்டன் கிடைக்கும் வரை மகேந்திர சிங் தோனி விளையாடுவார். அல்லது அவர் செல்வதற்கு முன்பாக ஒரு மிகச்சிறந்த கேப்டன் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்து விட்டுதான் சென்னை அணியை விட்டு விலகுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மொயின் அலி

இங்கிலாந்து அணிக்கு பல போட்டிகளில் மிக சிறப்பாக பேட்டிங்கிலும் பௌலிங் தரும் விளையாடக் கூடிய ஒரு தலைசிறந்த வீரர் ஆவார். குறிப்பாக இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய சென்னை அணிக்கு ஒரு தூணாக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்தது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் சென்னை அணி தக்க வைக்கப் போகும் அந்த ஐந்து வீரர்கள் 2

இவர் அடிப்படையில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவரது பந்துவீச்சு சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு சரியாக பயன்படும். அதே சமயம் இவர் மிக அற்புதமாக பேட்டிங் விளையாடுவார். எனவே ஒரு நல்ல ஆல்ரவுண்டர் எந்த ஒரு அணியும் கைவிட்டு விடாது. அதன் அடிப்படையில் இவர் நிச்சயமாக அடுத்த ஆண்டு சென்னை அணியால் தக்கவைக்க படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபக் சஹர்

சென்னை அணிக்காக தான் விளையாடிய முதல் போட்டியில் இருந்து தற்போது வரை பவர் பிளே ஓவர்களில் மிக அற்புதமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்குவதில் இவர் தலைசிறந்த வீரர். மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் மிக சிறப்பாக செயல்பட்டு அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக அற்புதமாக அதுவும் தொடர்ச்சியாக நல்ல வகையில் பந்து வீசும் இவரை சென்னை அணியை நிச்சயமாக அவ்வளவு எளிதில் கைவிட்டு விடாது. எனவே அடுத்த ஆண்டு இவரை சென்னை அணி நிச்சயமாக தக்கவைத்துக் கொள்ளும்.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் சென்னை அணி தக்க வைக்கப் போகும் அந்த ஐந்து வீரர்கள் 3

ருத்ராஜ்

எந்த ஒரு அணியும் ஓபனிங் பேட்ஸ்மேன் மிக சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர் பார்க்கும். அதுவும் ஓபனிங் விளையாடக்கூடிய வீரர் இந்திய பட்ஸ்மன் என்றால் அது அணிக்கு கூடுதல் அட்வான்டேஜ் ஆக மாறும். அதன் அடிப்படையில் தற்போது ருத்ராஜ் சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் சரி இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் சரி மிக அற்புதமாக விளையாடினார். இவர் அற்புதமாக விளையாடியதை அடுத்து ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடருக்கு பிசிசிஐ இவரை தேர்ந்தெடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் சென்னை அணி தக்க வைக்கப் போகும் அந்த ஐந்து வீரர்கள் 4

வருங்கால அடிப்படையில் சென்னை அணி நிர்வாகம் இவரை நிச்சயமாக கைப்பற்றி நிரந்தர ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இவரை விளையாட வைக்கும் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

கிருஷ்ணப்ப கௌதம்

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இவரை 9 கோடிக்கு மேல் சென்னை அணி ஏலம் எடுத்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட இவரால் விளையாட முடியாமல் போனது. இவர் மிக அற்புதமாக பந்தை சுழற்றி பந்து வீசுவார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இவர் நிச்சயமாக அணிக்கு ஒரு மிகப் பெரிய தூணாக இருப்பார். அதன் காரணமாகவே சென்னை அணி இவரை அவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது.

CSK New-recruit Krishnappa Gowtham Says 'bowlers Love Playing Under Dhoni';  Explains Why

ஆனால் இந்த ஆண்டு சென்னை அணியால் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட முடியாமல் போனது. இருந்தாலும் இனி வரும் ஐபிஎல் தொடர்களில் நிச்சயமாக ஒவ்வொரு அணிகளும் பழையபடிதனது சொந்த ஹோம் கிரவுண்டில் விளையாடும். எனவே சென்னை அணி இவரை நிச்சயமாக தக்க வைத்துக்கொள்ளும். ஒவ்வொரு அணியிலும் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அணியின் வெற்றிக்கு அவசியம், அது ஒரு இந்திய வீரர் ஆக இருந்தால் அணிக்கு கூடுதல் பலமாக அமையும். எனவே இவர் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *