சூரியகுமார் யாதவ்.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதிரடியாக விளையாடி தனக்கான ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றுள்ள இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் சூர்யாகுமார் யாதவ் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்று விளையாடி உள்ளார்.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை பெற்று கொடுத்த சூரியகுமார் யாதவிர்க்கு, டெஸ்ட் தொடரிலும் புஜாராவை நீக்கிவிட்டு மூன்றாவது பேட்டிங்கில் விளையாட வைக்கலாம் என ஒரு சில முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.