ஹனுமா விஹாரி.
கடந்த ஆண்டு வரை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராக வலம் வந்த விஹாரி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியிலிருந்து முற்றிலுமாக ஓரம்கட்டப்பட்டார்.
தற்பொழுது 29 வயது மட்டுமே ஆகும் விஹாரி இன்னும் விளையாடுவதற்கு அதிக வருடங்கள் இருப்பதால் அவருக்கு மீண்டும் ஒருமுறை இந்திய அணியில் வாய்ப்பளிக்கலாம் என பெரும்பாலானோர் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக தற்பொழுது இந்திய அணியின் மூன்றாவது பேட்டிங் ஆர்டர் மோசமாக இருப்பதால் புஜாராவை நீக்கிவிட்டு இவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்றும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இவர்களை தவிர்த்து நான்காவது மற்றும் ஐந்தாவது பேட்டிங் ஆர்டரில் விளையாடும் இந்திய அணியின் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரகானே ஆகிய இருவரில் ஒருவரை மூன்றாவது பேட்டிங் ஆர்டரில் விளையாட வைக்கலாம் என்றும் பிசிசிஐக்கு முன்னாள் வீரர்கள் பலர் அறிவுரை கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.