ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாக வர வாய்ப்புள்ள தமிழக வீரர்கள்! 1

ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாக வர வாய்ப்புள்ள தமிழக வீரர்கள்!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். அதன் பின்னர் அந்த அணிக்குள் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கிவிட்டது. தற்போது சொந்த காரணங்களுக்காக ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாக  வர வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி பார்ப்போம். அதில் 2 தமிழக வீரர்கள் இருக்கிறார்கள்.

 

ஜலஜா சக்சேனா

Jalaj Saxena

இவர் உள்ளூர் போட்டிகளில் ஜாம்பவான். தற்போது வரை 347 விக்கெட்டுகள் வீழ்த்தி 6344 ரன்கள் விளாசி இருக்கிறார். தற்போதைய கேரள உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறா.ர் 300 விக்கெட்டுகளையும் 6,000 ரன்களையும் அடித்த ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். கடந்த 2014-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2015 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும், 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணிக்காகவும் பெரிதாக ஆடவில்லை. இந்த முறை ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாக இவர் களம் இறக்க படலாம்

 

எம் அபிநவ்

Chepauk Stadium

இவர் தமிழக வீரர் ஆவார் . 23 வயதுதான் ஆகிறது மிகச் சிறந்த பந்துவீச்சாளர். பியூஸ் சாவ்லா, கரண் சர்மா ஆகியோருக்கு இணையான திறமை கொண்டவர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடியவர். 10 போட்டிகளில் 17 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஒரே ஒரு முதல்தர போட்டியில் விளையாடி இருக்கிறார். இவருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுத்தால் இவரது திறமையை நிரூபிப்பார்.

 

எஸ் மணிகண்டன்

S Manigandan

இவரும் சுழற்பந்து வீச்சாளர். கோவை கிங்ஸ் அணிக்காக டிஎன்பிஎல் தொடரில் விளையாடினார் . 10 போட்டிகளில் விளையாடிய 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவருக்கு தற்போது 24 வயதாகிறது. சுழற்பந்து வீச்சாளராக இருப்பதால் இவருக்கு இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாய்ப்பு கொடுத்து அவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *