ரோஹித் சர்மா நீங்க கிளம்பலாம்.. டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிர்க்கு பதில் விளையாட தகுதியுள்ள 5 வீரர்கள்..
மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும்,இந்திய அணியின் கேப்டனாகவும் துவக்க வீரராகவும் செயல்படும் இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மாவை., 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கவேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர்.
குறிப்பாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கவில்லை என்றாலும் துவக்க வீரராக வேறு ஒரு வீரரை இந்திய அணியில் நியமிக்கலாம், அப்பொழுதாவது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் பலமாக இருக்கும் என்று பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ரோஹித் சர்மா ஒன்பது சதங்களும் 14 அரசு 3437 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே துவக்க வீரராக இவர் சரிவர விளையாடதன் காரணமாகவே இந்த கோரிக்கை இந்திய கிரிக்கெட் வட்டத்தில் எழுந்து வருகிறது.
அந்த வகையில் ரோஹித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியின் துவக்க வீரராக செயல்பட வாய்ப்புள்ள மூன்று இந்திய வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
மாயங்க் அகர்வால்.
இந்திய அணியில் கே எல் ராகுலின் வருகையால் தன்னுடைய இடத்தை இழந்த இந்திய அணியின் அதிரடி வீரர் மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மாவிற்கு பதில் துவக்க வீரராக செயல்படக்கூடிய முதல் வீரராக பார்க்கப்படுகிறார்.
இந்த வருடம் முழுவதும் சர்வதேச டெஸ்ட் தொடரில் இவர் பங்கேற்று விளையாடவில்லை என்றாலும், கடைசியாக நடந்து முடிந்த ரஞ்சித் கோப்பையில் 9 போட்டியில் விளையாடி மிகச் சிறப்பாக செயல்பட்டு 990 ரன்கள் அடித்து அசுர பார்மில் உள்ளார். இதனால் இவரை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக விளையாட வைக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.